• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பினைத் தாபித்தல்
- இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பினைத் தாபிக்கும் பொருட்டு 2013‑08‑23 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு சட்டமூலமானது சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன்பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.