• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழா
- 2023 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 75 ஆவது சுதந்திரதின விழாவுக்கான பணிகளை ஒழுங்கு செய்வதற்கும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு பின்வரும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
சனாதிபதி
பாதுகாப்பு அமைச்சர்
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்;

* மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள்,
பிரதம அமைச்சர்,
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்;

* மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
கடற்றொழில் அமைச்சர்;

* மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்கள்,
கல்வி அமைச்சர்

* மாண்புமிகு (கலாநிதி) பந்துல குணவர்த்தன அவர்கள்,
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்,
வெகுசன ஊடக அமைச்சர்;

* மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள்,
சுகாதார அமைச்சர்,
நீர்வழங்கல் அமைச்சர்;

* மாண்புமிகு அலி சப்ரி அவர்கள்,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்;

* மாண்புமிகு விதுர விக்கிரமநாயக்க அவர்கள்,
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்;

* மாண்புமிகு கஞ்சன விஜேசேக்கர அவர்கள்,
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்;

* மாண்புமிகு டிரான் அலஸ் அவர்கள்,
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்;