• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் குறைந்தபட்ச தர நியமங்களை அறிமுகப்படுத்துதல்
- இலங்கையில் வசிக்கும் அநாதைகள், ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் மற்றும் சட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பிள்ளைகளின் இடர்காப்பு, பாதுகாப்பு, மன மற்றும் உள நன்நிலையை உறுதிப்படுத்துவதற்காக சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் சிறுவர் அபிவிருத்தி சேவைகள் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றன. சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் நியதிச் சட்டங்கள் மகாண மட்டத்தில் ஏற்கவே நடைமுறையில் உள்ளபோதிலும் தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டல்கள் இல்லை. ஆதலால், சிறுவர் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட சகல தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்திலும் உரிய நிபுணர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்களின் கீழும் தயாரிக்கப்பட்டுள்ளதும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டதுமான 'இலங்கையிலுள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் குறைந்தபட்ச தர நியமங்கள் என்பதன் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.