• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒரே தடவையில் விசா வழங்குதல்
- நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி ஒருவர் வருகைதந்த திகதி முதல் 270 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்கு இந்நாட்டில் தங்கியிருப்பதற்கு இயலுமாகும் வகையில் ஒரு தடவை உள்வருகையுடனான (Single Entry) விசா வழங்க முடியும். அதேபோன்று நடைமுறையிலுள்ள விசா கட்டண முறையின் கீழ் ஒரு (01) வருட காலம் இந்நாட்டில் தங்கியிருப்பதற்கு விசா பெற்றுக் கொள்ளும் போது 685 ஐக்கிய அமெரிக்க டொலர்களை சுற்றுலா பயணி ஒருவர் செலுத்துதல் வேண்டும் இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, ஒரு தடவையில் நாட்டில் தங்கியிருக்கக்கூடிய ஆகக்கூடுதலான நாட்களின் எண்ணிக்கையை 90 நாட்களுக்கு உட்பட்டு, பல் வருகை (Multiple Entry) அனுமதியுடன் மின்னணு சுற்றுலா அனுமதியினூடாக ஒரு (01) வருட காலத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு ஒரே தடவையில் விசா வழங்குவதற்கும் இதன் பொருட்டு தற்போது ஒரு வருட காலம் சார்பில் வர்த்தக விசா மற்றும் வதிவிட விசா என்பன சார்பில் அறவிடப்படும் விதத்தில் 200 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கட்டணமொன்றை அறவிடுவதற்கும் இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.