• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை தாபித்தலும் உணவுப் பாதுகாப்பு குழுவைத் தாபித்தலும்
- நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமையின் மத்தியில் உணவு பொருட்கள் அடங்கலாக அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்கப்படுவதை உறுதி செய்து வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை மற்றும் நடைமுறை தீர்வுகளை அமைச்சரவைக்கு சிபாரிசு செய்வதற்கு மாண்புமிகு சனாதிபதி அவர்களின் தலைமையில் வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை தாபிப்பதற்கும் இந்த உபகுழுவின் பணிகளுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு குழுவைத் தாபிப்பதற்கும் மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.