• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அமைச்சரவை உபகுழுக்களை நியமித்தல்
- அமைச்சரவைக் கூட்டங்களில் கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கு அதிக காலத்தை ஒதுக்குவதற்கு இயலுமாகும் வகையிலும் பிற உரிய விடயங்களை ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டிய விடயங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்படும் அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு இயலுமாகும் வகையிலும் அமைச்சரவை உபகுழுக்களை தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, புதிய கருத்திட்டங்களை ஆரம்பித்தல் மற்றும் பெறுகை நடவடிக்கைகள் போன்ற அரசாங்க செலவுகள் தொடர்புபட்ட பிரேரிப்புகள் தொடர்பில் கொள்கை ரீதியிலான சிபாரிசுகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களின் தலைமையில் அரசாங்க செலவுகளை முகாமித்தல் பற்றிய அமைச்சரவை உபகுழுவை தாபிப்பதற்கும் அரசாங்க சேவை நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றம் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை போன்ற தாபன விடயங்கள் சம்பந்தமாக முன்வைக்கப்படும் விஞ்ஞாபனங்களிலுள்ள பிரேரிப்புகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு கொள்கை ரீதியிலான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் தாபன விடயங்கள் பற்றிய அமைச்சரவை உபகுழுவை தாபிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.