• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டத்தை திருத்துதல்
- அறிவுச் செயற்பாட்டினை வௌிவாரியாக பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் (Knowledge Process outsourcing), வர்த்தக செயற்பாடுகளை வௌிவாரியாக பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் (Business Process outsourcing), வேறு நாடுகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்காக கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகம் (Back Office) மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள் (ICT enabling Services) பல தற்போது நாட்டின் பிரதான நகரங்களை அண்டி உருவாகியுள்ளன. இந்த நிறுவனங்களின் தன்மைக்கேற்ப இதில் சேவை புரியும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேரங்களுக்கு அமைய பணிபுரிய நேர்ந்துள்ளது. ஆயினும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப் படுத்தல்) சட்டத்தின் கீழ் பி.ப.6.00 மணியின் பின்னர் பெண்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான சாத்தியம் காணப்படுவது மட்டுப்படுத்தப்பட்ட சில தொழில்களில் மாத்திரமாகும். இந்த நிலமையின் கீழ் பெண்களை இரவுச் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட ஏற்பாடுகள் திருத்தப்படவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப் படுத்தல்) சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.