• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் iROAD 1 மற்றும் iROAD 2 ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களின் அடுத்த கட்டங்கள் சார்பில் நிதி பெற்றுக்கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் iROAD 1 மற்றும் iROAD 2 நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் கிராமிய வீதிகள் சுமார் 6,250 கிலோமீற்றர்களும் தேசிய வீதிகள் சுமார் 650 கிலோமீற்றர்களும் விருத்தி செய்வதற்கும் பராமறிப்பதற்குமாக 140 சிவில் வேலை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கிராமிய வீதிகள் சுமார் 4,800 கிலோமீற்றர்களினதும் தேசிய வீதிகள் சுமார் 300 கிலோமீற்றர்களினதும் வேலைகள் முற்றாக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டங்களின் பணிகளை தடையின்றி செயற்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் iROAD 1 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்டத்திற்கான 243 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கடன் தொகை மற்றும் iROAD 2 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 4 ஆம் கட்டத்திற்கான 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கடன் தொகை என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு உரியதாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்தி தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.