• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lankan Airlines Limited நிறுவனம் சார்பில் விமானசேவைகள் காப்புறுதி காப்பீடு ஒப்பந்தங்களை வழங்குதல்
- Sri Lankan Airlines Limited நிறுவனம் அதன் விமானங்கள் சார்பில் காப்புறுதி காப்பீடுகளை 04 வகுதிகளின் கீழ் காப்புறுதி சேவைகளை பெற்றுக் கொள்கின்றது. இந்த 04 வகுதி காப்புறுதி காப்பீடுகள் சார்பில் இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள காப்புறுதி கம்பனிகளிடமிருந்து வரையறுக்கப்பட்ட தேசிய ரீதியிலான போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.