• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் கைத்தொழில்களை தாபிப்பதற்காக காணித்துண்டுகளை குறித்தொதுக்குதல்
- பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சினால் 'பிராந்திய கைத்தொழில் போட்டை நிகழ்ச்சித்திட்டம்' என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 25 முதலீட்டாளர்களுக்கு 13 கைத்தொழில் பேட்டைகளிலிருந்து காணித் துண்டுகளை ஒதுக்கும் பொருட்டு பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.