• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
செலவை பிரதிபலிக்கும் நீர்க் கட்டணத்தை அறிமுகப்படுத்துதல்
- தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் நிதி நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியானதும் தடையற்றதுமான நீர் சேவையை வழங்குதல் பொருட்டு கட்டண திருத்தம் மேற்கொள்வது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மீண்டுவரும் கையாள்கைச் செலவு மற்றும் மூலதன கடன் சேவை பொறுப்புக்களை தழுவுவதற்கு இயலுமாகும் வகையில் தற்போது அறவிடப்படும் நீர் கட்டணம் மற்றும் வடிகால் கட்டணம் என்பவற்றைத் திருத்தும் பொருட்டு நீர்வழங்கல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.