• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையத்திற்கும் (UNESCO-ICHEI) இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சுக்கும் இடையில் கல்விசார் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையினைச் செய்து கொள்ளல்
- யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையின் கீழ் செயற்படும் உயர்கல்வி புத்தாக்கத்திற்கான சர்வதேச நிலையம் நாட்டின் அரசாங்க துறை தொழினுட்ப மற்றும் வாழ்க்கைத் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் பதவியணி ஆற்றலை மேம்படுத்துவதற்கு இணையவழி மூலம் பயிற்சியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதன் கீழ் செயற்கை அறிவு, ரொபோ தொழினுட்பம், தரவு பகுப்பாய்வு, இயந்திர நோக்கு, இயந்திர கற்கை, டிஜிட்டல் பட தயாரிப்பு மற்றும் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் ஆகிய துறைகளில் ஈடுபடுவதற்கான வசதியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.