2022-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மலைநாட்டு விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துதல் - பருவமடையாத பிள்ளைகளின் திருமணத்திற்கு பெற்றோர்களின் விருப்பம் தேவையென உள்ள மலைநாட்டு விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் பகுதி II ஐ இரத்துச் செய்தல் மற்றும் இதில் காணப்படும் ஒவ்வாமைகளை நீக்குதல் என்பன பொருட்டு சட்டங்களை வரைவதற்காக 2021‑10‑26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |