• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவின் பிரமாணக் குறிப்பை சட்டபூர்வமாக்குதல்
- யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை முறையாவும் பலப்படுத்தியும் போதுமான அளவு அதிகாரத்துடன் சட்டபூர்வமாக தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவை தாபிப்பதற்குத் தேவையான பிரமாணக் குறிப்பினை வரையும் பொருட்டு 2021‑06‑14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.