• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஆடை உற்பத்திக்குத் தேவையான துணைக் கருவிகளை (Accessories) இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளல்
- COVID -19 தொற்று நிலைமையிலும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த முதன்மை துறையொன்றாக ஆடை தொழில் உள்ளது. ஆயினும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போது நாட்டில் நிலவும் பாதகமான பொருளாதார சூழ்நிலை என்பன காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத ஆடை உற்பத்திக்குத் தேவையான துணைக் கருவிகளை (Accessories) இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இதற்கு தீர்வாக HS குறியீட்டு இலக்கம் 19 இன் கீ்ழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத உதிரிப்பாகங்கள் / பொருட்களுக்கு வரிச் சலுகையினை வழங்கும் பொருட்டு கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.