• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவித்தல்
- நிலவும் எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் அரசாங்கதுறை சார்ந்த ஊழியர்களுக்கு அவர்களுடைய போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்வது சிரமமாக உள்ளதன் காரணமாகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு பற்றாக்குறைக்கு தீர்வாகவும் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை செய்வதற்கு வௌ்ளிக்கிழமை நாட்களில் அரசாங்க அலுவலகங்களை திறக்காமல் இருப்பதற்கு 2022‑06‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, குறித்த அறிவுறுத்தல்களை உள்ளடக்கி மூன்று (03) மாத காலத்திற்கு செல்லுபடியாகும் விதத்தில் 22‑06‑15 ஆம் திகதியிடப்பட்டதும் 15/2022 ஆம் இலக்கக்தைக் கொண்டதுமான அரசாங்க நிருவாக சுற்றறிக்கையானது வௌியிடப்பட்டது. ஆயினும், தற்போது பொது போக்குவரத்து சேவை பழைய நிலைக்கு திரும்புவதாலும் மற்றும் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கான ஆரம்ப செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு போதுமானளவு காலம் கடந்துள்ளமை கிடைத்துள்ளமை என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சுற்றறிற்கையை உடனடியாக செயல்வலுவுக்கு வரத்தக்கதாக இரத்துச் செய்யும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.