• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெற்செய்கை விவசாயிகளினால் பெற்றுக் கொள்ளப்பட்டு செலுத்த தவறியுள்ள விவசாய கடன்களை பதிவழிப்புச் செய்தல்
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன் பின்னர் உருவான COVID - 19 தொற்று நிலைமை என்பவற்றினால் நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதோடு, பொதுவாக சகல துறைகளின்பால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இது கடும் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. இந்த நிலைமை மொத்த சனத்தொகையின் சுமார் 30 சதவீதமான விவசாயிகளுக்கும் தாங்கிக் கொள்ள முடியாதளவுக்கு பாதித்துள்ளதோடு, இரசாயன பசளை பாவனைக்குப் பதிலாக சேதனப் பசளையினைப் பயன்படுத்தும் தீர்மானத்தினாலும் விவசாயிகள் மேலும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலைமையின் கீழ் நெற்செய்கை விவசாயிகள் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகையை மீள செலுத்துவதற்கு இயலாமற்போயுள்ளது இந்த கடன் அறவிடமுடியாக் கடனாக வங்கிகளினால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக எதிர்வரும் பெரும் போகத்தில் நெற் செய்கைக்குத் தேவையான கடன் தொகையினைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும்பாலான விவசாயிகள் தகைமையற்றவர்களாக இருப்பதற்கான வாய்ப்பு நிலவுகின்றமையினால் அரசாங்கத்தின் தலையீட்டுடன் அவர்களுக்கு சலுகை வழங்குவது அத்தியாவசியமாகியுள்ளது. இதற்கிணங்க, இரண்டு ஹெக்டயார்களுக்கு அல்லது அதற்கு குறைந்த காணில் நெற்செய்கைக்கா அரசாங்க வங்கிகள் மூலம் பெற்றுக் கொண்டு இதுவரை செலுத்த தவறியுள்ள அடிப்படை கடன் தொகையை பதிவழிப்புச் செய்யும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.