2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான திருத்தம் - 'சிறு உரித்து நீதிமன்றம்' என்னும் சொற்களை உள்ளடக்கி 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5A பிரிவைத் திருத்துவதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |