• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவைக்கான (அத்தியாயம் 101) திருத்தம் (LXVI ஆம் அத்தியாயத்தை நீக்குதல்)
- சிறு உரித்து நீதிமன்ற விசேட நடவடிக்கை முறையினை அறிமுகப்படுத்தி புறம்பான சட்டமொன்றை வரைவதற்கும் சிறு உரித்து நீதிமன்றங்களைத் தாபிப்பதற்குமாக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித் துறை சட்டத்திற்கு செய்யப்படும் திருத்தங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சிறு உரித்து நீதிமன்றங்கள் சம்பந்தமான நடவடிக்கைமுறை ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ள குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் LXVI ஆம் அத்தியாயத்தை நீக்குவதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.