• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தைத் திருத்துதல்
- இலங்கை வலய ரீதியிலும் சருவதேச ரீதியிலும் கட்டுப்பட்டுள்ள உடன்படிக்கைகளுக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்கும் கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்களை நிலைபேறுடையதாக முகாமிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தைத் திருத்த வேண்டுமென இனங்காணப்டப்டுள்ளது. இதற்கிணங்க சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தைத் திருத்துவதற்கு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.