• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் கசினோ தொழில்துறையை முறைப்படுத்துதல்
- 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ தொழில்துறை (ஒழுங்குறுத்தல்) சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட வரி சட்டம் என்பவற்றின் மூலம் இலங்கையில் கசினோ தொழில்துறையை ஒழுங்குறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் கசினோ தொழில்துறையை நடாத்தி செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கவேண்டிய போதிலும் இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை வலுவாக்கம் செய்வதற்கான தேவையான கட்டளைகள் இதுவரை வழங்கப்படாததன் விளைவாக இதுவரை எந்தவொரு கசினோ தொழில்துறைக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. இந்த நிலைமையின் கீழ் தற்போது கசினோ தொழில்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து முறையாக உரிய வரிகளை அறவிடுவதற்கு கடினமாகவுள்ளது. ஆதலால், இத்தகைய தொழிலை ஒழுங்குறுத்தும் மற்றும் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெறவேண்டிய வரிகளை அறவிடும் நோக்கில் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ தொழில்துறை (ஒழுங்குறுத்தல்) சட்டத்தின் கீழ் கட்டளைகளை வௌியிடுவதற்கும் 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட வரி சட்டத்திற்கு பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.