• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலைகள் திணைக்களம் புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகம் என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாய பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டம்
- சிறைச்சாலை கைதிகளை சிறைச்சாலைகளில் சிறைப்படுத்தி வைப்பதற்குப் பதிலாக அவர்களை நாட்டின் மனிதவளமாக கருதுவதன் மூலம் கைதிகளின் உழைப்பினை நாட்டின் கமத்தொழில் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடாக 'சருசார - சிறைச்சாலையிலிருந்து விளை நிலத்திற்கு' என்னும் விவசாயத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கமத்தொழில் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் திறந்தவௌி சிறைச்சாலை மற்றும் வேலை முகாம்களில் ஆகக்கூடிய அறுவடையினை பெற்றுக் கொள்ளும் விவசாயப் பயிர்களை பயிர்செய்வதற்கும் அதன் மூலம் கிடைக்கும் அறுவடையினை சிறைச்சாலையில் உள்ளவர்களின் உணவு தேவையை ஈடுசெய்வதற்கு பயன்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் பணியகத்தின் ஊடாக நடாத்தப்பட்டுவரும் மூன்று (03) புனர்வாழ்வளிப்பு நிலையங்களுக்கு கமத்தொழில் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு கிழக்கு மாகாணத்தின் கந்தகாடு மற்றும் நவசேனபுர ஆகிய பிரதேசங்களில் மகாவலி அதிகாரசபைக்கும் தேசிய கால்நடை வளர்ப்பு அதிகாரசபைக்கும் சொந்தமான பயிர்செய்யப்படாத 1,000 ஏக்கர் காணிகளை பெற்றுக் கொண்டு இதில் 500 ஏக்கரில் சோளமும் மீதி காணியில் இந்த பிரதேசத்திற்குரிய தானியங்கள், மரக்கறி வகைகள் மற்றும் பழவகைகள் போன்றவற்றை புனர்வாழ்வளிப்பவர்களின் உழைப்பில் பயிர்செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் சம்பந்தமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.