• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமான பயிற்சி நிறுவனமொன்றைத் தாபித்தல்
- இலங்கை விமானப்படையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் மட்டக்களப்பு விமான நிலையத்தை விமானப் பயண முடிவிடமொன்றாக 2018 ஆம் ஆண்டில் விருத்தி செய்திருந்த போதிலும் விமானங்களை இறக்கும் மற்றும் நிறுத்தி வைக்கும் கட்டணங்களிலிருந்து இந்த விமான நிலையத்திற்கு விலக்களிக்கப்பட்டுள்ள மையினால் தற்போது இதன் மூலம் எவ்வித வருமானமும் ஈட்டப்படுவதில்லை. இந்த நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறித்த விமான நிலையத்தின் இடவசதியினை வேறு பயனுள்ள நடவடிக்கையொன்றுக்காக பயன்படுத்துவது பொருத்தமான தென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க இந்த விமான நிலையத்தில் விமான பயிற்சி நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கு போட்டி அடிப்படையில் பிரேரிப்புகளை கோருவதற்கு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.