• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போது நாட்டில் பல்வேறுபட்ட கைத்தொழில்களுக்காக பயன்படுத்தப்படும் ammonium nitrate வெடிபொருள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான மாற்று நடவடிக்கை
- சீமெந்து / Water gel / emulsion உற்பத்தி கைத்தொழில்கள் மற்றும் கருங்கற்களை வெடிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப் படும் ammonium nitrate வெடிபொருள் இறக்குமதி செய்தல் / களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் சம்பந்தமான விசேட உரிமை இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு குறித்த வெடிபொருளை வழங்கிவந்த வழங்குநருக்கு அதனை வழங்க முடியாமை காரணமாக தற்போது நாட்டில் ammonium nitrate வெடிபொருளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. இதன் காரணமாக குறித்த வெடிபொருளை பயன்படுத்தும் கைத்தொழில் சார்ந்த பணிகளுக்கு கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றாக குறுகிய காலம் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டில் துரிதமாக நாட்டிற்கு ammonium nitrate வெடிபொருள் இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.