• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை மீளத் தாபித்தலும் உணவுப் பாதுகாப்பு குழுவைத் தாபித்தலும்
- வாழ்க்கைச் செலவினை நிலையாக பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியிலான மற்றும் நடைமுறை சார்ந்த தீர்வுகளை அமைச்சரவைக்கு சிபாரிசு செய்யும் பொருட்டு வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை மீளத் தாபிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவின் கட்டமைப்பானது பின்வருமாறாகும்.

* சனாதிபதி - (தலைவர்)
* பிரதம அமைச்சர்
* கடற்றொழில் அமைச்சர்
* போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
* கமத்தொழில் அமைச்சர்
* பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
* மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
* வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்

அதேபோன்று மேற்போந்த வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவின் பணிகளுக்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு மாண்புமிகு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் உரிய அமைச்சுக்களின் செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் உணவுப் பாதுகாப்பு குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.