• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Jet A - 1 விமான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதனை உறுதி செய்யும் பொருட்டு புதிய வழங்குநர்களை இனங்காணுதல்
- இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையிலிருந்து வௌியேறும் விமானங்களுக்குத் தேவையான அன்றாட விமான எரிபொருள் தேவையானது அண்ணளவாக 1.2 மில்லியன் லீற்றர்களாகும். நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் உள்நாட்டு வௌிநாட்டு விமான கம்பனிகளின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்குத் தேவைப்படும் ஆகக்குறைந்த எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் விமான சேவைகளை தடையின்றி நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபையில் பதிவு செய்துகொண்டுள்ள எரிபொருள் களஞ்சிய உரிமையாளர்களுக்கு Jet A - 1 விமான எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகித்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினாலும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.