• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அற்றோனிதத்துவ கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
- போலியான மற்றும் சட்டவிரோதமான விதத்தில் அற்றோனிதத்துவத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளை குறைப்பதற்கு அற்றோனித்தத்துவ கட்டளைச் சட்டத்திற்கு திருத்தங்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு 2021 யூலை மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.