• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோசடி தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்
- நொத்தாரிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் இறுதி விருப்பாவண கட்டளைச் சட்டம் என்பவற்றிற்கு செய்வதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு அமைவாக மோசடி தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கும் சில இடைநேர் விளைவான திருத்தங்களை செய்யவேண்டிய தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு 2021 ஒக்றோபர் மாதம் 18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.