• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெண் புலம்பெயர் பணியாளர்களுக்கான குடும்ப பின்னணி அறிக்கை பற்றிய தேவைப்பாட்டை நீக்குதல்
- வீட்டு வேலைகளுக்காக வௌிநாடு செல்லும் பெண் புலம்பெயர் பணியாளர்களின் பிள்ளைகள் ஐந்து வயதிற்கு குறைவானவர்கள் இல்லையென்பதை உறுதி செய்யும் நோக்கில் நடைமுறையிலுள்ள 'குடும்ப பின்னணி அறிக்கை' சமர்ப்பிக்கும் கட்டாய தேவைப்பாடு காரணமாக பெண்களின் உரிமையின்பால் தாக்கத்தை செலுத்துகின்றதென பெண்களுக்கான உரிமைகளை பாதுகாத்தல் சம்பந்தமான வௌிப்படுத்தியுள்ள சருவதேச அறிக்கைகள் பல சுட்டிக்காட்டியுள்ளன. அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் குறித்த அறிக்கையினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான சகல தகைமைகளை பூர்த்தி செய்திருந்த போதிலும் சில உத்தியோகத்தர்கள் பல்வேறுபட்ட காரணங்களின் மீது இந்த அறிக்கையை தாமதப்படுத்து'வதன் மூலம் வௌிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்க்கும் பெண்கள் சிரமங்களுக்கு ஆளாக்கப்படுகின்றமை பற்றியும் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கையினை சமர்ப்பிப்பதற்கு தகைமையற்ற சில பெண்கள் வேறு சட்ட விரோத வழிகளின் ஊடாக எவ்வித மேற்பார்வையுமின்றி வௌிநாடுகளுக்கு சென்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமை பற்றியும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகள் இருக்கும் பெண்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்லும்போது கட்டாய குடும்ப பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்கும் தேவையிலிருந்து விலக்களிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.