• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத போக்குவரத்து கட்டணங்களைத் திருத்துதல்
- அரசாங்க கொள்கைகளுக்கு' அமைவாக பயணிகள் போக்குவரத்துக்கு இலங்கை புகையிரத திணைக்களம் சலுகை கட்டண முறையொன்றை பின்பற்றுகின்றது. ஆயினும், அண்மைக் காலமாக எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள துரித அதிகரிப்பின் மீது இந்த திணைக்களத்தின் மீண்டுவரும் நட்டமானது மேலும் அதிகரித்து வருகின்றமையினால் திருப்திகரமான புகையிரத சேவையொன்றை நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் திணைக்களத்தினால் ஈட்டப்படும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வது அத்தியாவசியமானதாகும். இதற்கிணங்க, ஐந்து (05) வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிக்குள் திருத்தப்படாத புகையிரத பயணிகள் போக்குவரத்து கட்டணம், அண்ணளவாக பதிநான்கு வருடங்களாக திருத்தப்படாத புகையிரதத்தில் சரக்குகளைகொண்டு செல்தல், தபால் போக்குவரத்து மற்றும் பிற சரக்குகளை கொண்டு செல்தல் போன்றவற்றுக்காக அறவிடப்படும் கட்டணம் என்பவற்றைத் திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.