• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனநாயக, செழிப்பான மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலுள்ள இலங்க என்னும் நிகழ்ச்சித்திட்டம்
- “சனநாயக நல்லாட்சி மற்றும் சமூக சகவாழ்வு என்பன பொருட்டிலான ஒத்துழைப்பை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" மற்றும் நிலைபேறுடைய மற்றும் இணைந்த பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்" என்பவற்றுக்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசு அரசாங்கத்திற்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகள் 2011 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கிணங்க, இந்த இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பயனுள்ள சனநாயக நிருவாகம், இணைந்த சந்தையினை அடிப்படையாகக் கொண்ட விருத்தி மற்றும் அதிர்ச்சி உட்பட அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான வளங்களைப் பலப்படுத்துதல் போன்ற துறைகளின்பால் அடிப்படை கவனம் செலுத்தி "சனநாயக, செழிப்பான மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலுள்ள இலங்கை" என்னும் புதிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்துவதற்கும் 2026 ஆம் ஆண்டுவரை அமுலில் உள்ள விதத்தில் 57 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கொடையினை ஐக்கிய அமெரிக்க சருவதேச அபிவிருத்திக்கான முகவராண்மையினால் வழங்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் கொடையினை பெற்றுக் கொள்வதற்கு இணக்கப்பேச்சுகளை நடாத்தும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.