• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சேமிப்பு வங்கிக்கு தனியார் பாதுகாப்புச் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கான பெறுகை
- தேசிய சேமிப்பு வங்கியின் பிரதான அலுவலகம் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள அதன் கிளைகள் என்பவற்றிற்கு பாதுகாப்புச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்விகள் முறையினைப் பின்பற்றி விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு தொகுதிக்கு அமைவாக தகைமை பெற்றுள்ள பாதுகாப்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உரிய ஒப்பந்தங்களை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.