• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சுற்றாடல் கொள்கையை அங்கீகரித்தல்
- 2003 ஆண்டில் அப்போதைய சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட "தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் திறமுறை" பிரகடனம் தற்போது இலங்கையில் சுற்றாடல் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகாட்டும் பிரதான கொள்கை பிரகடனமாகும். கடந்த காலப்பகுதியில் தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் சுற்றாடலுக்கு தாக்கத்தைச் செலுத்தும் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோன்று சுற்றாடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார காரணிகளும் சுற்றாடல் விடயம் சம்பந்தமான விஞ்ஞான அறிவும் கணிசமான அளவு மாற்றத்திற்குள்ளாகியுள்ளன. இந்த நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுற்றாடல் விடயம் தொடர்பில் நிபுணர்களினதும் தரப்பினர்களினதும் ஆலோசனைகள் அதேபோன்று பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு 2003 ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட "தேசிய சுற்றாடல் கொள்கை மற்றும் திறமுறை" என்பதை சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் இறைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதற்கிணங்க, தயாரிக்கப்பட்டுள்ள தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.