• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புகையிரத ஒதுக்கு காணிகளை பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக தற்காலிக அடிப்படையில் வழங்குதல்
- புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான மொத்த புகையிரத ஒதுக்கு காணியானது சுமார் 14,000 ஏக்கர்கள் ஆகும். இதில் சுமார் 10 சதவீதமான காணி பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. மீதி ஒதுக்கு காணிகளில் புகையிரத திணைக்களத்தின் அபிவிருத்தி நோக்கங்களுக்கு உடனடியாக தேவைப்படாத மற்றும் புகையிரத பாதை, புகையிரத நிலையம் சார்ந்து புகையிரத ஒதுக்கங்களாக ஒதுக்கப்பட்டுள்ள பயிர்ச் செய்கைக்கு உகந்த காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் பொருட்டு தற்காலிக அடிப்படையில் வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய பிரதேசங்களில் ஏற்கனவே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு , புகையிரத பாதைகளுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளித்து குறித்த காணிகளை கமத்தொழில் சார்ந்த பயன்பாட்டிற்கு குத்தகை அடிப்படையில் ஒரு (01) வருட காலத்திற்கு வழங்கும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.