• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆழமற்ற கடற்பகுதிகளில் ஏற்றுமதி சார்ந்த கடல் அட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்குதல்
- இயற்கை கடல் சூழலிருந்து அறுவடை செய்யப்படும் கடல் அட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அளவு அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் இதற்கிணங்க, கிடைத்த அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு கடல் அட்டை இனப்பெருக்க நிலையங்களைத் தாபித்தல், கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்துதல், வர்த்தக ரீதியிலான வளர்ப்பு ஒன்றாக கடல் அட்டை ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்ளைத் தாபித்தல் என்பவற்றின் மூலம் அந்நிய செலாவணி வருமானத்தினை அதிகரித்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் வர்த்தக கடல் அட்டைகள் வளர்ப்புக் கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 5,000 ஏக்கர்கள் இனங்காணப்பட்டு அவற்றுள் 100 ஏக்கர் மாத்திரம் கடல் அட்டை உற்பத்தி, ஏற்றுமதி கிராமங்களைத் தாபிப்பதற்கும் குறித்த 100 ஏக்கர் காணியில் ஒரு ஏக்கர் வீதம் கடல் அட்டை உற்பத்தி பண்ணைகளைத் தாபிப்பதற்கும் உரியதான கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.