• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கை) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஆண்டிறிக்கையினை (இறுதி வரவுசெலவுத்திட்ட நிலமை அறிக்கை) உரிய நிதியாண்டு முடிவடைந்ததன் பின்னர் ஐந்து மாதங்கள் கடப்பதற்கு முன்னர் வௌியிடப்படுதல் வேண்டும் இதற்கிணங்க, 2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிகையானது இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.