• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு அரசாங்க உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல்
- தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, இந்த நிலைமையின் கீழ் அரசாங்க துறை ஊழியர்களுக்கு அவர்களுடைய போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வது பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் கிழமைநாட்களில் கடமை புரியும் நாளொன்றை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை வழங்கி எதிர்காலத்தில் உருவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவு பற்றாக்குறைக்கு மாற்று வழியாக அவர்களுடைய வீடுகளில் அல்லது வேறு இடத்தில் கமத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொருட்டு தேவையான வசதிகளை வழங்குவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசாங்க நிறுவனங்கள் தவிர ஏனைய அரசாங்க நிறுவனங்களை எதிர்வரும் மூன்று (03) மாத காலத்திற்கு வௌ்ளிக்கிழமை நாட்களில் மூடி வைக்கும் பொருட்டு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.