• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"அங்கம்பொர" என்றழைக்கப்படும் சண்டைக் கலையை பாதுகாத்து மேம்படுத்துதல்
- நாட்டிலுள்ள பாரம்பரிய விளையாட்டு, சண்டைக் கலை அதேபோன்று கலாசார மரிபுரிமையொன்றாக முக்கியத்தும் கொண்ட "அங்கம்பொர" என்றழைக்கப்படும் சண்டைக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "அங்கம்பொர" என்றழைக்கப்படும் சண்டைக் கலை சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு 2019 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வௌியிடப்படவில்லை. ஆதலால், "அங்கம்பொர" என்றழைக்கப்படும் சண்டைக் கலையை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் ஆங்கிலேயர்களின் காலணித்துவ ஆட்சியினால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலொன்றை வௌியிடும் பொருட்டு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.