• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வௌியிடப்பட்ட 02 வர்த்தமானி அறிவித்தல்கள், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வௌியிடப்பட்ட 06 வர்த்தமானி அறிவித்தல்கள், 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலக்கம் 02/2022 கொண்ட அரசிறை பாதுகாப்பு ஆணையை விதித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் என்பற்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.