• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யூரியா பசளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவின் EXIM வங்கியிலிருந்து 55 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியினைப் பெற்றுக் கொள்தல்
- 2022/2023 பெரும் போகத்திற்குத் தேவையான யூரியா பசளை கொள்வனவு செய்வதற்காக 55 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியினைப் இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் ஊடாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.