• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கனடா உலக பல்கலைக்கழக சேவையின் (WUSC) தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டம் 2020 - 2027ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- கனடா உலக பல்கலைக்கழக சேவை (WUSC) உலகம் முழுவதும் குறைந்த நலன்களைக் கொண்ட இளையோர் மற்றும் பெண்களுக்கான கல்வி, தொழில் மற்றும் வலுவூட்டல் சார்பில் வாய்ப்பினை உருவாக்கும் தன்னார்வ ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது இந்த நிகழ்ச்சித் திட்டமானது அண்ணளவாக 30 வருடங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதோடு, இருதரப்பினர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிகையொன்றின் கீழ் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆண்டு வரையிலான காலப்பகுதியிலும் இதன் கீழ் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. COVID - 19 சார்ந்த சுற்றுலா வரையறைகள் காரணமாக கடந்த இரண்டு வருட காலத்தினுள் இந்த நிகழ்ச்சித்திட்டம் இலஙகையில் நடைமுறைப் படுத்தப்படாததோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அரசாங்க மற்றும் அரச சார்பற்ற பத்து அமைப்புகளின் கீழ் 2.76 மில்லியன் கனேடிய டொலர்கள் கொண்ட கொடையொன்றின் மூலம் உரிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்து வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.