• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 46 ஆம் பிரிவைத் திருத்துதல்
- தொழில் நியாய சபைகள; தாபிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் சட்டத்தரணிகளுக்கு சமமான விதத்தில் தொழில் நியாய சபைகளின் முன் தரப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தி தோற்றுவதற்கு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சட்டத்தரணி அல்லாத பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அண்மைக் காலமாக சட்டத்தரணிகள் அல்லாத பிரதிநிதிகளுக்கு தொழில் நியாய சபைகளின் முன் தோற்றுவது சம்பந்தமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலைமையை தடுக்கும் நோக்கில் தொழில் ஆணையாளர் அல்லது அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு நடுத்தீர்ப்பாளர் ஒருவருக்கு தொழில் நீதிமன்றத்தில் அல்லது தொழில் நியாய சபையின் முன் உரிய தரப்பினர்களினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு குறித்த தரப்பு சார்பில் தோற்றுவதற்கு இயலுமாகும் வகையில் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தை திருத்தும் பொருட்டு 2017‑02‑21 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரிசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.