• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தையும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள் நடுகை மானிய சட்டத்தையும் திருத்துதல்
- 423 ஆம் இலக்கமுடைய அரசாங்க நிதி சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் இயங்காதுள்ள நியதிச்சட்ட நிதியங்களை மூடுவதற்குத் தேவையான சட்ட திருத்தங்களைச் செய்ய வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் கட்டுப்பாட்டு நிதியத்தையும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள் நடுகை மானிய சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இறப்பர் மீள் நடுகை நிதியத்தையும் கலைத்துமூடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிதியங்கள் சம்பந்தமாக குறித்த சட்டங்களிலுள்ள ஏற்பாடுகள் தொடர்ந்தும் இருப்பது தேவையற்றதென்பதனால் இந்த இரண்டு சட்டங்களும் திருத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கிணங்க, 1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு சட்டத்தையும் 1953 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இறப்பர் மீள் நடுகை மானிய சட்டத்தையும் திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.