• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-06-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை திருத்துதல்
- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு பொதுத் திறைசேரியின் பிரதிநிதிஒருவரையும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது அவருடைய பிரதிநிதி ஒருவரையும் நியமிப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தும் பொருட்டு 2021‑01‑04 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரிசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.