• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொருளாதார நிலைப்படுத்தலின் பொருட்டு வருமானத்தை அதிகரித்தல்
- 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தளர்த்தப்பட்ட வரி கொள்கையொன்றினை அறிமுகப்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, தனிநபர் வருமான வரி, கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி ஆகிய வரிகளின் விகிதாசாரங்களை குறைப்பதற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தனிநபர் வருமான வரி என்பவற்றின் வரி அடிப்படையினை குறைப்பதற்கும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாக அரசாங்க வருமானம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. அதேபோன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதமொன்றான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை மற்றும் அரசாங்க கடன் என்பனவும் அதிகரிப்பதற்கு இந்த தீர்மானம் காரணமாய் அமைந்துள்ளது. இந்த நிலைமையின் கீழ் அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பின்வரும் சட்டங்களை திருத்துவதற்குத் தேவையான சட்டமூலங்களை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம்.
* 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம்.
* 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத்தொடர்புகள் வரிச் சட்டம்.
* 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட வரிச் சட்டம்.
* 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டம்.