• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் ஆகிய சட்டங்களைத் திருத்துதல்
- 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில்களை முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1950 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க தொழில் பிணக்குகள் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழங்கப்படும் கொடைகள் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடுகள், மீளாய்வு மற்றும் ஆணை கோரும் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யும் போது பிணைப் பொறுப்புத் தொகையொன்றை வைப்புச் செய்யக்கூடிய விதத்தில் உரிய ஏற்பாடுகளை விதிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த சட்டங்களைத் திருத்துவதற்கு 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலங்கைள அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.