• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2022 தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான உலர் பொருட்கள் சரக்குக் கப்பலை சேவையில் ஈடுபடுத்துதல்
- வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான Mv.Ceylon Breeze மற்றும் Mv.Ceylon Princess ஆகிய இரண்டு கப்பல்களையும் 2022 தென்மேற்கு பருவ பெயர்ச்சிக் காலத்தில் சர்வதேச வாடகைச் சந்தையில் சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டு அபிப்பிராய வௌிப்படுத்தல் கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்த இரண்டு கப்பல்களையும் வர்த்தக முகாமைத்துவ வழிமுறையின் கீழ் குறித்த இந்த காலப்பகுதிக்குள் சேவையில் ஈடுபடுத்தும் பொருட்டிலான ஒப்பந்தத்தை சிங்கபூர் M/s Wallam Shipping Pte. Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.