• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அரசாங்கத்தின் வௌிநாட்டு கடன்களின் மீள் கட்டமைப்பு தொடர்பில் சர்வதேச நிதி ஆலோசகர் ஒருவரினதும் சர்வதேச சட்ட ஆலோசகர் ஒருவரினதும் சேவையின் பெறுகை
- இலங்கை அரசாங்கத்தின் வௌிநாட்டு கடன்களை மீள் கட்டமைப்பதற்கு சர்வதேச நிதி ஆலோசகர் ஒருவரின் சேவையினதும் சர்வதேச சட்ட ஆலோசகர் ஒருவரின் சேவையினதும் பெறுகையின் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக நிதி ஆலோசகர் ஒருவரின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக 28 பிரேரிப்புகளும் சட்ட ஆலோசகர் ஒருவரின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்குரியதாக 23 பிரேரிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க, குறித்த பெறுகைகள் இரண்டிற்கும் உரியதாக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட வழிப்படுத்தல் குழுக்களின் சிபாரிசுகளின் மீது பின்வருமாறு உரிய பெறுகைகளை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* சர்வதேச நிதி ஆலோசனைக்கான பெறுகையை பிரான்ஸ் M/s Lazard நிறுவனத்திற்கு வழங்குதல்.

* சர்வதேச சட்ட ஆலோசனைக்கான பெறுகையை M/s Clifford Chance LLP நிறுவனத்திற்கு வழங்குதல்.