• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை விலையை தீர்மானிக்கும் பொருட்டு எரிபொருள் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துதல்
- பெற்றோலிய உற்பத்திப் பொருட்களின் விற்பனை விலையை தீர்மானிக்கும் பொருட்டு வௌிப்படைத்தன்மை வாய்ந்ததாக சகல செலவு ஆக்ககூறுகளும் அடங்கும் விதத்தில் விஞ்ஞான ரீதியிலான அடிப்படையில் விற்பனை விலையினை தீர்மானிக்கும பொறிமுறையொன்று இருக்கவேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இத்தகைய வழிமுறையொன்றின் மூலம் நுகர்வோரின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகங்கொடுத்துள்ள நிதிப் பிரச்சினைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதற்கிணங்க 06 பிரதான செலவு ஆக்கக்கூறுகளின்பால் கவனம் செலுத்தி மாதாந்தம் பெற்றோலிய உற்பத்தி பொருட்களின் தீர்மானிப்பதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் தலைமையில் ஏனைய உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அதன் சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் விலை சூத்திரத்திற்கு அமைவாக மாதாந்தம் பெற்றோலிய உற்பத்தி பொருட்களின் விலைகளை திருத்துவதற்குமாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.