• Increase font size
  • Default font size
  • Decrease font size

2022-05-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விகளை வழங்குதல்
- இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் ஒத்துழைப்பின் மீது கிடைக்கப்பெற்றுள்ள 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட குறுகியகால கடன் வசதியின் கீழ் டீசல் மற்றும் பெற்றோல் என்பவற்றை கொள்வனவு செய்யும் பொருட்டு நான்கு பெறுகைகள் சார்பில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்குறிப்பிட்ட பெறுகைகளை வரையறுக்கப்பட்ட இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவது சம்பந்தமாக வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.